சென்னை: ஆடிட்டர் குருமூர்த்தியை ரஜினியின் விளம்பர செயல்பாட்டாளர் என்று வேண்டுமானால் அழைக்கலாம் என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் புதனன்று 'பிக்கி' அமைப்பு சார்பாக நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் 'துக்ளக்' இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும் பொழுது கூறியதாவது:
ரஜினிக்கு நான் ஆலோசகராக உள்ளேன் என்று கூறப்படுவது உண்மையாக இருந்தால் எனக்குப் பெருமைதான். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன்.ரஜினியும் மோடியும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியை ரஜினியின் விளம்பர செயல்பாட்டாளர் என்று வேண்டுமானால் அழைக்கலாம் என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஆடிட்டர் குருமூர்த்தியை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி என்று ஊடகங்களில் உள்ளவர்கள் அழைக்கிறாரகள். ஆனால் அப்படி எந்த ஒரு பதவியும் ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை. வேண்டுமானால் அவரை ரஜினிக்கான விளம்பர செயல்பாட்டாளர் என்றுதான் அழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, பாளை. தொகுதிகளின் அதிமுக வேட்பாளா்கள் நாளை மனுதாக்கல்
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

சாமிதோப்பு பகுதியில் என். தளவாய்சுந்தரம் பிரசாரம்

தூத்துக்குடியில் தமிழக முதல்வா் வாகனத்தை மறித்து சோதனை
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


