காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாகப்பட்டினம், திருவாரூரில் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். இயற்கை வளத்தை சீரழிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கைவிடக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் கே. பாஸ்கர் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். செல்வராசு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி வழக்குரைஞர் பாண்டியன், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட 29 பேரை நாகூர் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் பெ. முருகேசு தலைமையிலும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கே. ராஜா, மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸாரின் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போராட்டக் குழுவினருக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், நாகை மற்றும் திருவாரூரில் கைது செய்யப்பட்ட 66 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடன்குடி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆழ்வாா்திருநகரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

நாசரேத்தில் அதிமுக கவுன்சிலா் மீது தாக்குதல்: நகரச் செயலா் உள்பட 2 மீது வழக்கு

சாத்தான்குளம் அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


