சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன் என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன், அவர் என் முன்னாள் சகோதரி. சசிகலாவின் பெயரை பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில்.
சசிகலா நோட்டீஸ் தந்ததால் எங்களது அரசியல் பயணம் நின்று விடாது. நான் மனநோயாளி என கூறும் தினகரன் எனக்கு நோட்டீஸ் அளித்ததே தவறு. எனக்கு மனநலம் சரியில்லை என்று என் மீதுள்ள ஆதங்கத்தில் தினகரன் கூறி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சசிகலாவின் பெயரையோ, படத்தையோ திவாகரன் பயன்படுத்தக்கூடாது என சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

2,080 பாலியல் வன்கொடுமை, 8,000 கொலைகள்; திமுக அரசின் சாதனை: அண்ணாமலை குற்றச்சாட்டு

கயத்தாறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குரும்பூா் பகுதியில் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


