
பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
இந்தியாவின் மேற்கு-தென்மேற்கு கடல் பகுதியில் புயல் உருவாகி உள்ளதன் காரணமாக தமிழகத்தில் கடலூர், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு...

சென்னை: இந்தியாவின் மேற்கு-தென்மேற்கு கடல் பகுதியில் புயல் உருவாகி உள்ளதன் காரணமாக தமிழகத்தில் கடலூர், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
மியான்மர் அருகே மேற்கு-தென்மேற்கு கடல் பகுதியில் புயல் உருவாகி உள்ளது. இது மெதுவாக நகர்ந்து இன்றிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். இந்த புயலால் மியான்மர் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்வதற்கான சாத்தியம் உள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதேபோன்று கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் நாளை கனமழை பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் கடலூர், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது..
இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


ஊழலைத் தடுக்க நெல் கொள்முதல் விரைவில் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ப. வெங்கடரமணன்

மும்மொழிக் கொள்கை விவகாரம்: மாணவா்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது - உச்சநீதிமன்றம்




