மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தினக்கூலி தொழிலாளர்களின் மாத ஊதியம்: அரசு பதிலளிக்க உத்தரவு

தினக்கூலி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை உயர்த்துவது மற்றும் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பது குறித்து மத்திய, மாநில

Updated On :6 நவம்பர் 2018, 1:28 am IST


தினக்கூலி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை உயர்த்துவது மற்றும் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசிபிகா என்ற நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றியவர் விக்னேஷ். இவர் கடந்த 2015 -ஆம் ஆண்டு பணியின்போது அடுக்குமாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து விக்னேஷின் பெற்றோர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி சென்னையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் முறையீடு செய்தனர். இந்த முறையீட்டை விசாரித்த ஆணையம், விக்னேஷின் பெற்றோருக்கு ரூ.8.95 லட்சம் இழப்பீட்டுத் தொகையை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி விக்னேஷின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, வெல்டர் பணிக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம்தோறும் ரூ.16,704-ஐ நிர்ணயித்து தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விக்னேஷின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.18 லட்சத்து 60 ஆயிரத்து 73-ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். இந்த தொகையை விபத்து நடந்த நாளில் இருந்து 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மத்திய அரசு கடந்த 2010 -ஆம் ஆண்டு தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.8,000-த்தை நிர்ணயித்துள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொள்ள தவறிவிட்டன. எனவே, தினக்கூலி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை ஆண்டுக்கு ஒரு முறை ஏன் உயர்த்தக்கூடாது, தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ஏன் அதிகரிக்கக் கூடாது என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பர் 3 -ஆம் தேதிக்கு நீதிபதி கிருபாகரன் ஒத்திவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.