ஹவாலா பணத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக 3 போலீஸார் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கடலூர் - புதுவை எல்லையில் ஆல்பேட்டை சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இங்கு கடந்த 2017-ஆம் ஆண்டு தலைமைக் காவலர்கள் ரவிக்குமார், செல்வராஜ், காவலர் அந்தோணி சாமிநாதன் ஆகியோர் பணியிலிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து நாகப்பட்டினம் சென்று கொண்டிருந்த பேருந்தை சோதனையிட்டதில் ஒரு பையில் ஹவாலா பணம் ரூ.50 லட்சம் இருந்தது தெரிய வந்தது.
அங்கு பணியிலிருந்த போலீஸார் 3 பேரும் இந்தப் பணத்தை பறிமுதல் செய்து, அதில் ரூ.30 லட்சத்தை மட்டும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு எஞ்சிய பணத்தை மறைத்துவிட்டனர். இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் விசாரணை செய்து, புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, ரவிக்குமார் உள்பட 3 போலீஸாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மேல் விசாரணை நடைபெற்றது. இதில், 3 பேரும் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் பணிநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 27! கே. பாக்யராஜ் மறைவு - நேரலை
காவிரி பழைய பாலம் மூடல்: பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

இராக்கை அபாரமாக வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது செனகல்!





