தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு 

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். 

News image
Updated On :9 நவம்பர் 2018, 2:15 pm

DIN

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

அதன் முதல் கட்டமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரைச் சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆதரவு திரட்டினார். 

அதன் தொடர்ச்சியாக சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளியன்று சந்தித்துப் பேசினார். 
 
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்பின்போது சந்திராபாபு நாயுடுவுடன் ஆந்திர மாநில அமைச்சர் ரமேஷ் உடன்வந்திருந்தார். 

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் அ .ராசா உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றிருந்தனர்.     

சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும்  கொட்டகை செய்தியாளர்களை சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.