சென்னை: தஞ்சை , திருவாரூர் உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய 'கஜா' புயலின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏறட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன், பல்லாயிரம் மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது முழுமையான அளவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்நிலையில் தஞ்சை , திருவாரூர் உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில விற்பனை மேம்பாட்டு ஆணைய மேலாளர் கிர்லோஷ் குமார் தெரிவித்துள்ள தகவலாவது:
'கஜா' புயலின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுளள தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து பகல் 1 மணி அளவிலேயே பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மொத்தமாக 4 மாவட்டங்களிலும் சேர்த்து 600-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு

பயா்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி - அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷம் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


