தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

கஜா புயலால் ஏரியில் செத்து மிதந்த 183 ஆடுகள்!

கஜா புயலால் பேராவூரணி அருகே மேய்ச்சலுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 183 ஆடுகள் ஏரியில் விழுந்து உயிரிழந்தன. 

News image

ஏரியில் விழுந்ததால் உயிரிழந்த ஆடுகள்.

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

கஜா புயலால் பேராவூரணி அருகே மேய்ச்சலுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 183 ஆடுகள் ஏரியில் விழுந்து உயிரிழந்தன. 
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கி காலை வரை மிக பலத்த காற்று வீசியது. இதனால், மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
பேராவூரணி அருகேயுள்ள பெருமகளுர் ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன், கருப்பையா ஆகியோருக்கு சொந்தமான சுமார் 250 ஆடுகள் ஏரிக்கரையின் மேற்பகுதியில் வயல்வெளியில் மேய்ச்சலுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
கஜா புயலின் வேகத்தில் கரையின் மேற்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆடுகள் ஏரி நீருக்குள் விழுந்ததில் 183 ஆடுகள் செத்து மிதந்தன. 
இதேபோல்,  கஜா புயலால் முடச்சிக்காடு பகுதியில் 35-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.