
நிவாரணப் பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம்: போக்குவரத்துத் துறை
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் வரும் நிவாரணப் பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் வரும் நிவாரணப் பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற அரசுப் பேருந்துகளில் நிவாரணப் பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தன்னார்வ அமைப்புகள், சமூக நல அமைப்புகள், தனியார்கள் என பல தரப்பிடம் இருந்து நிவாரணப் பொருட்கள் அரசுப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு லக்கேஜ் சார்ஜ் போடுவதற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துத் துறை சார்பில், லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என்று அரசுப் பேருந்துகளை இயக்குநம் நடத்துநர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






