தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பிரச்னைகளுக்கு தீர்வு காண புதுதில்லியில் உள்ள அகில இந்திய பார் கவுன்சில் தீர்ப்பாயத்தை அணுக வேண்டும் என்ற சுற்றறிக்கையை செல்லாது என்று அறிவிக்க கோரிய மனுவுக்கு, இந்திய பார் கவுன்சில் செயலர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆனந்த முருகன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் அக்பர் அலி, மதிவாணன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்தனர். தேர்தலில் தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இந்தத் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள், பிரச்னைகள் ஏற்பட்டன. இதுதொடர்பாக பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், அகில இந்திய பார் கவுன்சில், பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
அதில் வழக்குரைஞர் சட்டம் 1961-இன் கீழ் அறிவிப்பு பிரிவு 15 ( 2 ) ஈ- படி தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு புதுதில்லியில் உள்ள அகில இந்திய பார் கவுன்சில் தீர்ப்பாயத்தை அணுகி தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்ட வழக்குரைஞர்கள் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள். எனவே, பார் கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்குகளை அவர்கள் புதுதில்லி சென்று கையாளுவது சாத்தியமற்றது.
எனவே, தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பிரச்னைகளுக்கு தீர்வு காண புதுதில்லியில் உள்ள அகில இந்திய பார் கவுன்சில் தீர்ப்பாயத்தை அணுக வேண்டும் என்ற சுற்றறிக்கையை செல்லாது என்று அறிவித்து உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக அகில இந்திய பார் கவுன்சில் செயலர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்துகள் உரிய நிறுத்தங்களில் நிறுத்தாவிட்டால் நடவடிக்கை

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கு தள்ளுபடி

பறக்கும் ரயில் பாதையை சென்னை மெட்ரோவுடன் இணைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் சிக்கிய மென் பொறியாளிரிடம் விசாரணை: கேரள போலீஸாா் சென்னையில் முகாம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


