தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

புயலுக்கு பிறகு தமிழக அரசின் வேகம் குறைவு: பிரேமலதா

புயலுக்கு பிறகான தமிழக அரசின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்திருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம்சுமத்தினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

புயலுக்கு பிறகான தமிழக அரசின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்திருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம்சுமத்தினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக திருச்சிக்கு திங்கள்கிழமை வந்திருந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: கஜா புயலால் மீனவர்களும் விவசாயிகளும் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளாக வளர்த்த தென்னை மரங்களை இழந்து வீதிக்கு வந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.
டெல்டா மாவட்டங்களில் மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையை சீர்செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய நிதியை உரியவர்களுக்கு விரைந்து கொண்டு சேர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் தேமுதிக சார்பில் முடிந்த அளவு உதவிகள் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை புயலுக்கு முந்தைய வேகத்தை தேமுதிக தலைவர் பாராட்டியிருந்தார். ஆனால், புயலுக்கு பிந்தைய அரசின் செயல்பாடுகள் மந்த நிலையிலேயே உள்ளது. பொதுமக்கள் பலரும் அரசின் செயல்பாடுகளை குறை கூறி விமர்சனம் செய்கின்றனர். பெரும்பாலான கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை. இதனால், குடிநீர், உணவு என அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ள பெரிதும் சிரமப்படுகின்றனர். அமைச்சர்களே கிராமங்களுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து நிலைமையை சீர்செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.