கஜா புயல் நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி அளிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியமும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கஜா புயல் மற்றும் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில்
50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் துயரத்துக்கும், மிகக் கடுமையான சேதத்துக்கும் உள்ளாகியுள்ளனர். புயலும், மழையும் மக்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.
வரலாறு காணாத சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கத் தேவையான நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில் திமுக அறக்கட்டளையிலிருந்து ரூ.1 கோடியும், திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுதந்திர நாள் விழா க்ளிக்ஸ்...

திருவொற்றியூர் பள்ளி மாணவன் கொலை: பெ. சண்முகம் கண்டனம்!
அன்பில் அவன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு 351 எம்எல்ஏ-க்கள் கிடைப்பர்: அன்புமணி
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



