கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவிடும் வகையில், திமுக அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கஜா புயல் மற்றும் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விவசாயிகள், மீனவர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பெருந்துயரத்திற்கும், மிகக் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.
புயலும் மழையும் பொதுமக்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. வரலாறு காணாத சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கத் தேவையான நிவாரணம், மறு சீரமைப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளையிலிருந்து ஒரு கோடி ரூபாயும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திம்பம் வனப் பகுதியில் பரவிய காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரம்

ஓணம்: சம்பல்பூா் - எா்ணாகுளம் இடையே போத்தனூா் வழியாக சிறப்பு ரயில்

சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் பலத்த காயம்

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி: கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளி சாம்பியன்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



