கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

பரந்தூர் விமானம் நிலையம் அமைந்தால் சென்னையில் வெள்ளம்: அமைச்சர் கீர்த்தனா

பரந்தூர் விமானம் நிலையம் கைவிடப்பட்டது ஏன்? அமைச்சர் கீர்த்தனா விளக்கம்.

Published On :

பரந்தூர் விமானம் நிலையம் அமைந்தால் சென்னையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக, விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, ”பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 90 சதவிகித நிலம் கையகப்படுத்தப்பட்டது, கையகப்படுத்திய நிலத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?

நிலத்திற்கு கொடுத்த இழப்பீட்டை மக்களிடம் இருந்து திரும்ப பெற முடியாது. இது தொடர்பாக அரசின் விளக்கம் தேவை” என்றார்.

இதனைத் தொடர்ந்து, பரந்தூர் விமானம் நிலையம் கைவிடப்பட்டதனால், தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “மாற்றுத்தொழில் திட்டங்கள் மக்களை பாதிக்காதவாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் செயல்படுத்தப்படும். இதன்மூலம், இந்தப் பகுதியில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஏற்படும்.

பரந்தூரில் முன்று போகம் விவசாயம் செய்யப்படுகிறது. வேர்க்கடலை, கரும்பும் பயிரப்படுகிறது. இந்தப் பகுதியில் மழை பெய்யாமல் இருந்தாலும், பயிர் சாகுபடி நடக்கும் விளைநிலங்கள் உள்ளன.

இங்கு இரண்டு கால்வாய் உள்ளன. இதன் மூலம் அடையாற்றிற்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீர் செல்கிறது. இதை அழித்துவிட்டால் சென்னையில் வெள்ளம் ஏற்பட பல வாய்ப்புகள் இருக்கிறது” என்றார்.

Minister for Industries and Investment Promotion Keerthana has stated that the construction of the Parandur airport could lead to flooding in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.