காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கருணாஸுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு? முதல்வர், பேரவைத் தலைவர் ஆலோசனை

கருணாஸுக்கு நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :1 அக்டோபர் 2018, 12:45 pm

DIN

தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் சனிக்கிழமை வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். 

இந்நிலையில், கருணாஸுக்கு நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ் அதிமுக அரசை விமர்சிப்பதாக எம்எல்ஏ ஒருவரின் புகாரை தொடர்ந்து கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திங்கள்கிழமை காலையில் பேரவைத் தலைவர் தனாபலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் பேரவைத் தலைவர் தனபால் உடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார். இவர்களுடன் அமைச்சர் தங்கமணி மற்றும் கொறடா ராஜேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர். 

இந்நிலையில், நெல்லையில் 2017-ல் பூலித்தேவர் பிறந்தநாள் விழாவில், தேவர் பேரவைத் தலைவர் முத்தையா காரை சேதப்படுத்திய வழக்கில் எம்எல்ஏ கருணாஸ் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.