ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தகாத உறவை உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி நியாயப்படுத்திய கணவன்: தற்கொலை செய்துகொண்ட மனைவி  

தகாத உறவை உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் சுட்டிக் காட்டி கணவன் நியாயப்படுத்தியதால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.  

News image
Updated On :1 அக்டோபர் 2018, 1:17 pm

DIN

சென்னை: தகாத உறவை உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் சுட்டிக் காட்டி கணவன் நியாயப்படுத்தியதால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.  

சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரில் வசித்து வருபவர் ஜான்பால் பிராங்கிளின் (26) அந்தப்  பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா (24).

இருவரும் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. பிராங்கிளினுக்கு திருமணத்திற்குப் பின் தான் பணிபுரியும் பூங்காவிலேயே துப்புரவுத்  தொழிலாளியாக வேலை பார்த்த பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனால் கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட புஷ்பலதா கண்காணிக்க தொடங்கி இருக்கிறார்.  பின்னரவருக்கு விபரம் தெரிய வந்திருக்கிறது. 

இந்நிலையில் சனியன்று மதியமே பிராங்கிளினுக்கு பணி முடிந்து விட்டது. ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவில்தான் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் தனது கள்ளக்காதலியுடன் இருந்து விட்டு வந்திருப்பதை அறிந்த புஷ்பலதா ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்துள்ளார். முடிவில் கோபத்துடன் பிராங்கிளின் வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்.

இதன் காரணமாக மனமுடைந்த புஷ்பலதா வீட்டிலுள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தன் உயிரையே மாய்த்துக் கொண்டார். வீடு திரும்பிய பிராங்கிளின் சடலமாய் மின் விசிறியில் புஷ்பலதா தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தான் நடந்த விபரங்களை பிராங்கிளின் தெரிவித்து இருக்கிறார். 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காரணம் கட்டி இப்படி ஒரு மரணம் நடந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.