உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
மாநில நீதிப் பணியில் 320 உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்ய முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஜூனிலும், முதன்மை எழுத்துத் தேர்வு ஆகஸ்ட்டிலும் நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றனர். இதையடுத்து, இதற்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வுகளில், மிகக் குறுகிய காலத்தில், அதாவது 5 மாதங்கள் 26 நாள்களில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரபு அமீரகம் புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம்!

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!

அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
