நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது சிபிஐ திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தது. 

News image
Updated On :8 அக்டோபர் 2018, 9:59 pm IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது சிபிஐ திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில், போராட்டத்தின் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி வன்முறையாக மாறியது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரிந்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.   

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. 

மேலும், சிபிஐ துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் முழுப் பின்னணி விவரங்களை விரிவாக விசாரித்து தொடர்புடைய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணையை 4 மாத காலத்துக்குள் சிபிஐ முடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்கள் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி, பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.