அரபிக் கடலில் லூபன் புயல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அரபிக் கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. லூபன் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த புயலானது ஓமன் கடற்கரையை நோக்கி நகரும். வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாறியுள்ளது.
இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் வடகிழக்கு பருவமழை நிலவுவதற்கான சூழ்நிலை மாறியுள்ளது. அடுத்து வரும் 24மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். எனவே, மீனவர்கள் வரும் 10-ம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










