ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

தாமிரவருணி புஷ்கரம்: சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கம்

தாமிரவருணி புஷ்கரம் விழாவை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்துக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Updated On :9 அக்டோபர் 2018, 1:48 am IST


தாமிரவருணி புஷ்கரம் விழாவை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்துக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
திருநெல்வேலி-தாம்பரம்: திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 14-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82610) புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். 
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.