ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ஷார்ஜாவில் அக். 31-இல் உலக புத்தகத் திருவிழா: முதல் முறையாக தமிழ் புத்தகங்கள்

ஷார்ஜாவில் அக். 31-ஆம் தேதி தொடங்கவுள்ள உலக புத்தகத் திருவிழாவில் முதல் முறையாக தமிழ்ப் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.

Updated On :9 அக்டோபர் 2018, 1:49 am IST


ஷார்ஜாவில் அக். 31-ஆம் தேதி தொடங்கவுள்ள உலக புத்தகத் திருவிழாவில் முதல் முறையாக தமிழ்ப் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.
இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) வயிரவன் கூறியது: 
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் உலக புத்தகத் திருவிழா கடந்த 37 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவில் முதல்முறையாக தமிழ் புத்தகங்கள் இந்த ஆண்டு இடம்பெறுகின்றன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. 
இந்த அரங்குகளில் தமிழின் முப்பது முன்னணி பதிப்பகங்கள் ஒன்றிணைந்து தங்களது புத்தகங்களைக் காட்சிப்படுத்தவுள்ளன. இதில் எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் கனிமொழி, நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர். சங்க இலங்கியம் முதல் நவீன இலக்கியம் வரை ஆயிரக்கணக்கான முக்கிய நூல்கள் இடம் பெறுகின்றன. வரலாறு, அறிவியல், சமூகம், பண்பாடு, மருத்துவம், கலைகள் எனப் பல்வேறு துறைகள் சார்ந்த நூல்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
புத்தகத் திருவிழாவையொட்டி ஷார்ஜாவில் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைப்பு செய்யத் தேவையான நடவடிக்கைகளை பபாசி எடுத்து வருகிறது. அமீரகத்திலுள்ள தமிழ்ச் சங்கங்கள், இலக்கிய அமைப்புகள், ஊடகங்கள் இதற்கு பெரும் ஆதரவு அளித்துள்ளன. வரும் நவம்பர் 10-ஆம் தேதி வரை இந்தப் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. 
முன்னதாக அக்டோபர் 28, 29 ஆகிய இரு நாள்கள் உலக அளவில் உள்ள பதிப்பாளர்கள் பங்கேற்கக் கூடிய கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் பதிப்பாளர்கள் இருபது பேர் அடங்கிய குழு பயணம் செய்யவுள்ளது. இந்தக் குழுவுடன் இணைந்து கொள்ள விரும்பும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பபாசியைத் தொடர்பு கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.