புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அடுத்த 12 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், பரவலாக மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 1:34 pm

வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், பரவலாக மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியகுளத்தில் 16 செ.மீ. மழையும், பெரியநாயக்கன்பாளையத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இதனிடையே தொடர் மழை காரணமாக மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேரும், மின்சாரம் பாய்ந்து சிறுமி ஒருவரும் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்றும், அக்டோபர் 26-ம்  தேதிக்கு மேல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.