எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதுச்சேரியில் கலை, இலக்கிய அமைப்பு தொடங்க இளையராஜா திட்டம்

புதுச்சேரியில் கலை, இலக்கிய அமைப்பை தொடங்க இசையமைப்பாளர் இளையராஜா திட்டமிட்டுள்ளார்.

News image

புதுவை முதல்வர் வே.நாராயணசாமியை திங்கள்கிழமை சந்தித்த இசையமைப்பாளர் இளையராஜா.

Updated On :22 அக்டோபர் 2018, 7:36 pm


புதுச்சேரியில் கலை, இலக்கிய அமைப்பை தொடங்க இசையமைப்பாளர் இளையராஜா திட்டமிட்டுள்ளார்.
கலை, இலக்கிய அமைப்பை தொடங்குவது தொடர்பாக, அதற்கான இடங்களைப் பார்வையிடுவதற்காக புதுச்சேரிக்கு இளையராஜா திங்கள்கிழமை வந்தார். அவர் முதல்வர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினார்.
கலை, இலக்கிய நிறுவனம் தொடங்குவது தொடர்பாக இளையராஜா தெரிவித்தவுடன், கலைகளைக் கற்றுத் தரும் பாரதியார் பல்கலைக்கூடம் புதுச்சேரியில் செயல்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.
பின்னர், கலைக்கூடம் அமைந்துள்ள தொகுதி எம்எல்ஏ ஜெயமூர்த்தியுடன், அவரை பாரதியார் பல்கலைக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். பாரதியார் பல்கலைக்கூடத்துக்குச் சென்ற இளையராஜா அந்தப் பகுதியை பார்வையிட்டு சென்னை திரும்பினார். இதுதொடர்பாக ஜெயமூர்த்தி எம்எல்ஏவிடம் கேட்ட போது, இயல், இசை, நாடகம் தொடர்பான அமைப்பை இளையராஜா தொடங்கும் எண்ணத்தில் உள்ளார். பாரதியார் பல்கலைக்கூடத்தை பார்வையிட்டார். இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.