கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி வெட்டிக் கொலை

சென்னை, திருவல்லிக்கேணியில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி திங்கள்கிழமை இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸார் விசாரணை

Updated On :22 அக்டோபர் 2018, 9:22 pm


சென்னை, திருவல்லிக்கேணியில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி திங்கள்கிழமை இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை திருவல்லிக்கேணி துலுக்கானத்தம்மன் தோட்டப் பகுதியை சேர்ந்தவர் யூசுப் மகன் முகமது தாஜிதீன் (எ) அப்பாஸ் (38). இவர் திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் திங்கள்கிழமை இரவு 10.30 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், முகமது தாஜிதீனை மறித்து, சரமாரியாக வெட்டினர்.
இந்த தாக்குதலில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். தகவலறிந்த ஐஸ்ஹவுஸ் போலீஸார் அங்கு விரைந்து, அவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முகமது தாஜிதீன் உயிரிழந்தார். 
இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முகமது தாஜிதீன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஆவார். 
ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், தொழில் போட்டி காரணமாகவா அல்லது வேறு காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டுள்ளரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.