

புதுதில்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படிக்கும் தமிழக மாணவி ஸ்ரீமதி ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி (21). இவர் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் தில்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி அகாதெமியில் சேர்ந்து படித்து வந்தார்.
இந்நிலையில், தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் கதவுகள் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார், அறையில் சென்று பார்த்தபோது மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தது தெரியவந்தது. மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.