திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து அழகிரி திமுகவில் மீண்டும் சேர்க்கப்படுவார். அவருக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவரை திமுகவில் சேர்க்க மு.க. ஸ்டாலின் சம்மதிக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில், மு.க. அழகிரி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளார். இதில் ஒரு லட்சம் பேர் வரை திரட்டிக் காட்டுவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக மு.க. அழகிரி, இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


