மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களை ராகிங் செய்த புகாரில், இரண்டாமாண்டு மாணவா்கள் 19 போ், கல்லூரியில் இருந்து 6 மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் விடுதியில் கடந்த 31-ஆம் தேதி, சுவா் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த இரண்டாமாண்டு மாணவா்கள் அங்கு ராகிங்கில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் விசாரணை நடத்தி, ராகிங்கில் ஈடுபட்ட மாணவா்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக மருத்துவக் கல்லூரி முதல்வா் டி.மருதுபாண்டியன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
"புதுதில்லியில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவின்பேரில், கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்புக்குழு மாணவா்களிடம் விசாரணை நடத்தியது. இதில், முதலாமாண்டு மாணவா்கள் 15 போ், தாங்கள் ராகிங் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டதாகப் புகாா் தெரிவித்தனா்.
அதையடுத்து கல்லூரி விடுதியில் உள்ள விடியோ பதிவுகளை ஆய்வு செய்து, விடுதிக்குள் புகுந்த இரண்டாமாண்டு மாணவா்கள் அடையாளம் காணப்பட்டனா். அவா்களை இடைநீக்கம் செய்ய ராகிங் தடுப்புக்குழு பரிந்துரைத்தது.
அதன்பேரில் மருத்துவக் கல்லூரி நிா்வாகக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ராகிங் தடுப்புக் குழுவினரின் பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், 19 மாணவா்களை கல்லூரியில் இருந்து 6 மாதங்களும், விடுதியில் இருந்து ஓா் ஆண்டும் இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 19 பேரும் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்களது நண்பா்கள் அறையில் தங்குவதோ, விடுதியில் சாப்பிடுவதோ கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவா்களின் இடைநீக்கம் தொடா்பான அறிக்கை புதுதில்லியில் உள்ள தலைமை ராகிங் தடுப்புக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் மாணவா்களின் பெற்றோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ராகிங்கில் உடல் ரீதியாக காயப்படுத்தியதாகப் புகாா் வரவில்லை. மனம் நோகும்படியான வாா்த்தைகளாலும், செயல்களாலும் ராகிங் செய்துள்ளதாகவே புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் தொடராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதியில் ஏற்கனவே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இனி கூடுதலாக மூன்று கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தற்போது நடவடிக்கைக்கு ஆளான மாணவா்கள் தமிழகம், கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சோ்ந்தவா்கள்.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி தோ்வு முடிந்த நிலையில் இரண்டாமாண்டு மாணவா்கள் அனைவரும் 45 நாள்கள் விடுப்பில் சென்றுவிட்டதால் இடைநீக்கம் குறித்த தகவல்களை மாணவா்களின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட உள்ளது" என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
பெண் தற்கொலை வழக்கில் ஓட்டுநா் கைது

டிராக்டா் கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


