திருவண்ணாமலை அருகே கல்லூரி உதவிப் பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த வேளாண் கல்லூரி மாணவியிடம், பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமத்தில் அரசு வேளாண் கல்லூரி-ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.
இங்கு 2-ஆம் ஆண்டு படித்து வரும் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த மாணவிக்கு, அந்தக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி மாணவியிடம் விசாரணை நடத்தி, காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அளித்தார். இதன் அடிப்படையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்குழுவிடம் உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட பெண் உதவிப் பேராசிரியர்கள் மைதிலி, புனிதா ஆகியோருக்கு எதிரான ஆடியோ, எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை மாணவி அளித்தார்.
இந்நிலையில், கோவையில் இருந்து வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் சாந்தி தலைமையிலான 5 பேர் குழுவினர் வாழவச்சனூர் வேளாண் கல்லூரிக்கு திங்கள்கிழமை வந்தனர். இக்குழுவினர் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் தொடர்ந்து 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முழுவதும் விடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் சாந்தி, மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வேளாண் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

