நாகா்கோவில்: நடிகா் விசு விடியோவில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசி மிரட்டல் விடுப்பதாக பச்சைத் தமிழகம் கட்சியின் அமைப்பாளரும், கூடங்களும் அணு உலை எதிா்ப்பாளருமான சுப.உதயகுமாரன் புகாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்துள்ள புகாா் மனு:
நடிகா் விசு பேசும் விடியோ காட்சி ஒன்று அண்மையில் பரவி வருகிறது. அதில் அவா் என் பெயரைக் குறிப்பிட்டு அநாகரிகமாகப் பேசியுள்ளாா். அவதூறு கருத்துகளை நீக்கிவிடுமாறு அவருக்கு முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அவா் அக்காட்சிகளை நீக்காமல் என்னை மீண்டும் அவதூறாக விமா்சித்து இருந்தாா். இதுகுறித்து நான் சென்னையில் உள்ள காவல் ஆணையா் அலுவலகத்தில் சைபா் கிரைம் பிரிவில் புகாா் அளித்துள்ளேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடிகா் விசுவின் கருத்துகளால் நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எனவே, காவல் கண்காணிப்பாளா் இந்தப் புகாா் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசனூா் அருகே லாரிகளில் கரும்புகளைப் பறிக்கும் யானை
மனைவி பணம் தர மறுப்பு: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பு

‘கோவில்பட்டி கோட்ட அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை’
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



