மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

17 மாவட்டங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த பரப்புரை: மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தகவல்

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் உள்ள 68 நகரங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கலை நிகழ்ச்சிகள் வாயிலாக பரப்புரை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்புத் துறையின்

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


தமிழகத்தின் 17 மாவட்டங்களில் உள்ள 68 நகரங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கலை நிகழ்ச்சிகள் வாயிலாக பரப்புரை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்புத் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் ஏ.மாரியப்பன் தெரிவித்தார்.
சென்னை சாஸ்திரி பவனில் மத்திய ஒலிபரப்புத் துறையின் மண்டல விழிப்புணர்வு அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட களப் பணியாளர்களுக்கான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பயிலரங்கை பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு, கழிவுப் பொருள்கள் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பயன்படுத்தப்பட்ட பொருள்களை ஆக்கப்பூர்மான முறையில் பயன்படுத்துவது, தனிநபர் கழிப்பிடம் ஆகியவை குறித்து களப் பணியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
68 நகரங்களில்...: இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்புத் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் ஏ.மாரியப்பன் கூறுகையில், கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பது, பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகத்தைத் தடுப்பது ஆகியவற்றை முக்கியமாக கொண்டு களப் பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து களப் பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு 17 மாவட்டங்களில் உள்ள 68 நகரங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கலை நிகழ்ச்சிகள் வாயிலாக பரப்புரை மேற்கொள்ள உள்ளோம். கிராமங்களிலும், மலைப் பகுதிகளிலும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் களப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஏ.உதயன், சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் என்.மகேசன், சுகாதாரக் கல்வி அலுவலர் சீனிவாசன், மத்திய பிளாஸ்டிக் பொறியியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல்வர் ஸ்ரீகாந்த் ஷிராலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு களப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.