எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றை யானை

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மூணுரோடு குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை வியாழக்கிழமை நுழைந்தது. 

கேத்தரின் அருவி பகுதியில் உள்ள புதரில் காணப்படும் யானை. 

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST


நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மூணுரோடு குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை வியாழக்கிழமை நுழைந்தது. 
கோத்தகிரி அருகே நீலகிரி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் கேத்தரின் அருவி மற்றும் மூணு ரோடு பகுதி உள்ளது. இப்பகுதியில் அதிக அளவு வன விலங்குகள் உள்ளன. 
இந்நிலையில், சுமார் 7 வயது மதிக்கக்தக்க ஆண் யானை தனது கூட்டத்திலிருந்து பிரிந்து வழி தவறி மூணுரோடு பகுதி குடியிருப்பு அருகே வந்தது.
வழிதவறி வந்த அந்த யானை அங்கும் இங்குமாக அலைந்து பின்னர் தேயிலைத் தோட்டம் வழியாக அங்குள்ள முள்புதரில் பதுங்கிக் கொண்டது. 
இதனைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு யானை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டது. 
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.