பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் மு.க. அழகிரி சந்திப்பு: தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூவை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வியாழக்கிழமை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST


தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூவை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வியாழக்கிழமை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அமைச்சர் செல்லூர் கே. ராஜூவின் தாயார் ஒச்சம்மாள், கடந்த 30ஆம் தேதி காலமானார். தமிழக முதல்வர், துணை முதல்வர் தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் அமைச்சரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்த அழகிரி, அவரது தாயார் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சில நிமிடங்கள் அமைச்சருடன் பேசிக் கொண்டிருந்த அழகிரி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் பி.எம்.மன்னன், எம்.எல்ராஜ் உள்ளிட்டோர் உடன் வந்தனர். 
அமைச்சருடன் திடீர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, நீங்கள் நினைப்பதைப் போல எதுவும் இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, செல்லூர் ராஜூவின் வீட்டுக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியானதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. 
திமுக தலைவர் மு. கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அழகிரி தனது ஆதரவாளர்களைத் திரட்டி சென்னையில் பேரணி நடத்தினார். 
இந்த பேரணி குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, பல்வேறு எதிர்ப்புக்கு இடையே ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி பேரணி நடத்தியுள்ளதாக அழகிரிக்கு பாராட்டுத் தெரிவித்தார். 
இந்நிலையில், அழகிரி, அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்குச் சென்று சந்தித்தது பலவிதமான ஊகங்களை ஏற்படுத்தியது. 
இருப்பினும் அமைச்சரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற வந்ததைத் தவிர அரசியல் ரீதியாக வேறொன்றும் இல்லை என்று இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.