பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

Published On :


தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில், அதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நினைவூட்டல் கடிதங்களை தமிழகத்துக்கு அனுப்பியது.
அதன் அடிப்படையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
350-க்கும் மேற்பட்ட வழக்குகள்: தமிழகத்தில் 170-க்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் இப்போதைய எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் மீது 350-க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதைத் தொடர்ந்து, இந்த வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். மாநில எல்லைக்கு உட்பட்ட அனைத்து வழக்குகளும் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். இதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எங்கு அமைய இருக்கிறது, யார் நீதிபதி போன்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.