முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
சாலைத் திட்டங்கள்: சேலம் -சென்னை வரையிலான சாலைத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாகவும், தமிழகத்தில் மத்திய அரசின் சாலைத் திட்டங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்' என்று உறுதிபடத் தெரிவித்தார். திமுக கைகாட்டும் நபரே பிரதமராக வருவார்' என அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








