
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை சந்தையில் பூக்கள் விற்பனை அதிகரித்திருந்தது. அருகம்புல் விலை 3 மடங்கு உயர்ந்திருந்தது.
தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற தோவாளை பூச்சந்தையில் ஓணம், கிறிஸ்துமஸ், தீபாவளி , பொங்கல் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைக் காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமன்றி, பெங்களூரு, மைசூரு போன்ற வெளி மாநிலப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பூக்கள் விற்பனைக்கு வரும்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வியாழக்கிழமை தோவாளை பூச்சந்தைக்கு பெங்களூரு, ஓசூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வழக்கத்தை விட அதிக பூக்கள் விற்பனைக்கு வந்தன.
மல்லிகை கிலோ ரூ. 600-க்கும் , பிச்சிப்பூ ரூ. 500-க்கும், முல்லை ரூ. 400-க்கும் விற்பனையாகின.
விநாயகருக்கு உகந்த அருகம்புல் ஒரு கட்டு வழக்கமாக ரூ. 10-க்கு விற்பனையாகும். ஆனால், வியாழக்கிழமை அருகம்புல் ஒரு கட்டு ரூ. 30-க்கு விற்பனையானது. விநாயகர் சிலைக்கு மாலையாகப் போடப் பயன்படுத்தப்படும் எருக்கம்பூ கிலோ ரூ. 100-க்கு விற்பனையானது. தெத்திப்பூ ரூ. 200ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






