கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

22 டிஎஸ்பி.க்கள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 22 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக காவல் துறை டிஜிபி

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST


தமிழகம் முழுவதும் 22 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக காவல் துறை டிஜிபி தே.க. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
அதன் விவரம் (இவர்கள் ஏற்கெனவே பணிபுரிந்த இடங்களின் விவரம் அடைப்புக்குறிக்குள்): 
மகேந்திரன், மதுராந்தகம் டிஎஸ்பி (மதுரை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு), சுப்பையா, சத்தியமங்கலம் துணை கோட்ட டிஎஸ்பி (தருமபுரி மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), கங்காதரன், திருவள்ளூர் துணை கோட்ட டிஎஸ்பி (திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), விஸ்வநாத் ஜெயன், தரமணி சரக உதவி ஆணையர் (சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி), சுப்பராயன், பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு டிஎஸ்பி (தரமணி சரக உதவி ஆணையர்), பன்னீர்செல்வம், மாதவரம் போக்குவரத்து குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று, கோவிந்தராஜ், பரங்கிமலை சரக உதவி ஆணையர்(தலைமையிடத்து டிஎஸ்பி), மோகன்தாஸ், மதுரை டவுன் குற்றப்பிரிவு உதவி ஆணையர் (பரங்கிமலை சரக உதவி ஆணையர்), கண்ணன், ராயபுரம் சரக உதவி ஆணையர் (காஞ்சிபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி) மற்றும் தனவேல், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் (ராயபுரம் சரக உதவி ஆணையர்) பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இளங்கோவன், நான்குநேரி துணை கோட்ட டிஎஸ்பி (சிவகங்கை மாவட்ட நில மோசடி விசாரணை பிரிவு டிஎஸ்பி), முருகேசன், கீழக்கரை துணை கோட்ட டிஎஸ்பி (சிவகங்கை மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி), சந்திரசேகர், திருத்துறைப்பூண்டி துணை கோட்ட டிஎஸ்பி (தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி) உள்பட 22 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.