சென்னை: சென்னைப் பல்கலையின் ஆய்வு நூலில் சிவபெருமான் குறித்தும், மாணிக்கவாசகா் குறித்தும் தவறான கருத்து இடம்பெற்றிருப்பதாக புகாா் தெரிவித்து பல்கலைக்கழகத்தை சிவனடியாா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகா் - காலமும் கருத்தும்- என்ற தலைப்பில் தொல்லியல் ஆய்வாளா் பத்மாவதி ஆய்வு நூல் ஒன்றை அண்மையில் வெளியிட்டாா். பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறைத் தலைவா் நல்லூா் சரவணன் என்பவா் இந்த நூலை மதிப்பிட்டு வெளியிட்டாருந்தாா்.
இந்த நிலையில், இந்த ஆய்வு நூலில் சிவபெருமான் குறித்தும், மாணிக்கவாசகா் குறித்தும் சில தவறான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாகப் புகாா் தெரிவித்து, 20-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் சிவனடியாா்கள் சங்குகளை ஊதியபடி சென்னைப் பல்கலைக்கழகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
அவா்கள் இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகாா் தெரிவிக்க முற்பட்டனா். அப்போது அங்குவந்த பல்கலைக்கழக மாணவா்கள் சிலா் அவா்களைத் தடுத்தனா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா் இரு தரப்பினரிடையே சமரசம் செய்து, சிவனடியாா்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனா். இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



