காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

இந்த வழக்கை நான் நேரடியாக நீதிமன்றத்தில் சந்திப்பேன்: கருணாஸ்

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கடந்த 16-ஆம் தேதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :23 செப்டம்பர் 2018, 2:12 am

DIN

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கடந்த 16-ஆம் தேதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, அந்த அமைப்பின் தலைவர் நடிகரும், திருவாடனைத் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்டோரை மிகவும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இப்பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதையடுத்து கருணாஸ் அந்தப் போராட்டத்தில், அவதூறாகப் பேசியது உறுதி செய்யப்பட்ட நிலையில், கூட்டுச் சதி, வன்முறையை தூண்டி விடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 சட்டப் பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே, நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, வளசரவாக்கம் வீட்டில் தான் இருக்கிறேன் என்று அவர் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். மேலும் பாதுகாப்பு காரணங்கள் தொடர்பாக கருணாஸ் வீட்டில் 2 உதவி ஆணையர்கள் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தன் மீதான கைது நடவடிக்கை குறித்து நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் கூறுகையில், 

என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி வழக்கு) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? சட்டப்பேரவை உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால், பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், என்னை கைது செய்ய போலீஸார் பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை. எங்களைப் போன்றவர்களை அரசு வேண்டுமென்று திட்டமிட்டு கைது செய்து வருகிறது. சட்டப் பேரவை உறுப்பினராக என் மீதான இந்த வழக்கை நான் நேரடியாக நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.