காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடவில்லை: அய்யாக்கண்ணுவின் திடீர் அறிவிப்புக்கு காரணம் என்ன?

வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிய நிலையில் தில்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் விவசாயிகள் சங்க தலைவர்

News image
Updated On :8 ஏப்ரல் 2019, 4:57 am

DIN

வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிய நிலையில் தில்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு சந்திப்புக்கு பின்னர் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது விவசாயிகள், அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வந்தார். 

இந்நிலையில், வரும் 17-வது மக்களவைத் தேர்தலி பிரதம் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து 11 விவசாயிகள் போட்டியிடுவார்கள் என அய்யாக்கண்ணு அதிரடியாக அறித்தார். இதற்காக அவர்கள் வாரணாசி செல்லவும் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், அய்யாக்கண்ணு பாஜக தலைவர் அமித்ஷாவை தில்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார். அமித்ஷாவுடனான சந்திப்பில் பியூஷ் கோயல் மற்றும் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

அமித்ஷாவுடனான சந்திப்பிக்கு பின் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித்ஷாவுடனான சந்திப்பு மன நிறைவை தருகிறது. பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார். 

பாஜக தேர்தல் அறிக்கையை தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இன்று 11 மணிக்கு தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிடுகிறார்கள்.  

அமித்ஷா சந்திப்புக்கு முன்பு, பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் வாரணாசியில் 111 விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடமாட்டோம் என தெரிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.