தமிழகத்தில் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கும், மாநிலத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சிக்கும் எதிராக வீசிவருகிற கடும் எதிர்ப்பு அலையை தாங்க முடியாமல் நவீன கோயபல்ஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்துள்ளது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. இந்தக் கூட்டணி 2004 இல் இணைந்து போட்டியிட்டு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பத்தாண்டு ஆண்டுகாலம் சிறப்பாக நடத்தியிருக்கிறது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதோடு, தமிழகமும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைப் பெற்று முன்னேறியது. ஆனால், பா.ஜ.க. - அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி திரைமறைவு பேரத்தின் அடிப்படையில் அமைந்த சந்தர்ப்பவாத கூட்டணியாகும். அ.தி.மு.க. மீது தமிழக ஆளுநரிடம் 25 ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறிய பா.ம.க. 70 நாட்கள் கழித்து, யார் மீது சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டுமென்று கோரியதோ, அவர்களோடு கூட்டணி சேர்ந்தது. எனவே, இந்தக் கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது.