மதுரை: மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
மாலை 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குகள் பதிவாகியுள்ளது
இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் 8 இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 8 மணியுடன் நிறைவடைந்தது.
மதுரை மக்களவை தொகுதியில் மொத்தம் 1,549 வாக்குசாவடிகளில் அமைக்கப்பட்டிருந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.