செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

மத்திய இந்திய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இது மழைக்கானது அல்ல

மத்திய இந்திய மாநிலங்களின் ஒரு சில பகுதிகளிலும், மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவிலும் வெப்ப நிலை 47 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2019, 12:27 pm

PTI


நாக்பூர்: மத்திய இந்திய மாநிலங்களின் ஒரு சில பகுதிகளிலும், மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவிலும் வெப்ப நிலை 47 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை புதன்கிழமை வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் சாஹு கூறியுள்ளார்.

மத்திய இந்திய மாநிலங்களிலும், மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதியிலும், மத்தியப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியிலும் அனல் காற்று வீசும் என்றும், ஒரு சில பகுதிகளில் கடுமையான அனல் காற்று வீசும் என்றும் சாஹு தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகி ஒடிஸாவைத் தாக்கவிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ள ஃபானி புயல், தரைக்காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்வதால் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.