சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. 

News image
Updated On :29 ஆகஸ்ட் 2019, 8:46 am

DIN

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. 

முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட தி.மு.க. எம்.பி.க்களும் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். 

தொகுதிக்கு சென்று மக்கள் பிரச்னைக்காக பாடுபட வேண்டும். தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மக்களை நேரடியாக சந்தித்தும் மனுக்களை பெற வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசித்துள்ளனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் 11 மணி வரை நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.