தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தருமபுரம் ஆதீனம் மறைவு: பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல்

தருமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் மறைவுக்கு பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image

தருமபுரம் ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் மறைவு

Updated On :4 டிசம்பர் 2019, 12:22 pm

DIN


சென்னை: தருமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் மறைவுக்கு பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 

தருமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் இன்று (04/12/2019) பரிபூரணமடைந்துள்ளார்.

தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்ற இவர், கவுரவ பேராசிரியராகவும்  பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவஸ்தான பொறுப்பில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர், தருமபுர ஆதீனத்தின் 26வது மடாதிபதியாக பதவியேற்று  49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்துள்ளார்.

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் எண்ணற்ற சைவ இலக்கியங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு பல கருத்தரங்குகளை நடத்தி தமிழுக்கு பெருந்தொண்டாற்றி வந்ததும், தமிழ் தொண்டே இறைத்தொண்டு என்று செயலாற்றியதில் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் பங்கு அதிகம்.

குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளின் மறைவு தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரது பிரிவைத் தாங்கும் மன வலிமையை பக்தர்களுக்கும், ஆதீனத்தைச் சார்ந்தவர்களுக்கும் வழங்கிட அன்னை பராசக்தியை வேண்டுகிறேன் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.