டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சட்டென மாறியது வானிலை: தமிழகத்தில் பரவலாக மழை!

சென்னையில் சனிக்கிழமை காலை வழக்கமான பனிமூட்டமாக விடியவில்லை. மாறாக லேசான தூறலுடன் ஜம்மென்று இருந்தது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:26 pm

DIN


சென்னை: சென்னையில் சனிக்கிழமை காலை வழக்கமான பனிமூட்டமாக விடியவில்லை. மாறாக லேசான தூறலுடன் ஜம்மென்று இருந்தது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. 

சென்னையை அடுத்த திருத்தணி, நல்லாட்டூர், திருவாலாங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மதுரையில் நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்தது. திருவாரூர் பகுதிகளில் கனமழை பெய்தது.

புதுச்சேரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை (டிச. 7) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், பனிக்காற்று மறைந்து தூறல் போட ஆரம்பித்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை (டிச. 7) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.