புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :9 டிசம்பர் 2019, 8:29 am

DIN


டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உதவி மாவட்ட ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இதில், நடப்பு ஆண்டில் 181 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். முதல்முறையாக, குறுகிய காலத்திலே, அதாவது 145 நாட்களிலேயே குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு டிசம்பர் 23ம் தேதி வரை டிசம்பர் 31 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.