ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அந்த பயம் இருக்கணும்: ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்திருக்கும் பாஜக

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் இடப்பட்ட பதிவு கடும் சர்ச்சையானதைத் தொடர்ந்து அது நீக்கப்பட்டது.

News image
ஸ்டாலின்
Updated On :25 டிசம்பர் 2019, 7:21 am

DIN


சென்னை: பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் இடப்பட்ட பதிவு கடும் சர்ச்சையானதைத் தொடர்ந்து அது நீக்கப்பட்டது.

பெரியாரின் நினைவுநாள் குறித்து தமிழக பாஜக பதிவிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்தை நீக்கியிருப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது கருத்தை டிவீட் செய்திருந்தார்.

"பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக.  
அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? 
அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்!
அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?" என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு தமிழக பாஜக சும்மா இருந்து விடுமா என்ன? உடனடியாக ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மற்றொரு பதிவை இட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, பின்னர் திராணி இன்றி பயந்து நீக்கியவர், 

பயம் பற்றி அந்தப் பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? 

Story image

இந்துக்கள் என்றாலே மிரண்டு விடுகிறீர்கள் போலும். அந்த பயம் இருக்கணும் ஸ்டாலின் என்று, விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினின் டிவிட்டர் பதிவில் இடப்பட்டு பிறகு நீக்கப்பட்ட டிவிட்டர் பக்கத்தையும் இணைத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.