ஆம்பூர் அருகே வாழைத் தோட்டத்தை நாசம் செய்த காட்டு யானைகள்
ஆம்பூர் அருகே யானைகள் தொடர்ந்து வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.


ஆம்பூர் அருகே யானைகள் தொடர்ந்து வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று 5வது நாளாக ஆம்பூர் அருகே மாச்சம் பட்டு, கொத்தூர், பாலூர், உமராபாத், பனங்காட்டூர் பகுதிகளில் யானைகள் வயல் வெளிகளில் புகுந்தன. பாலூர் கிராமத்தில் சண்முகம், பெருமாள் என்பவரது நிலத்தில் கிருஷ்ணவேணி என்பவர் குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் வாழைத் தோட்டங்களை நாசம் செய்தது.
அதேபோல மாச்சம்பட்டு கோதண்டராமன் ரெட்டியார் நிலத்தில் குத்தகைக்குப் பயிரிட்டு இருந்த மனோகரன் பூந்தோட்டத்தையும் நாசப்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...