ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கைது செய்யப்படுகிறாரா நெல்லை கண்ணன்?

நெல்லை கண்ணன் வீட்டின் முன்பாக திமுக, காங்கிரஸ், முஸ்லிம் அமைப்பினர் மற்றும் பாஜக, இந்து முன்னனி அமைப்பினரும் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

News image
Updated On :31 டிசம்பர் 2019, 10:47 am

DIN

நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாகப் பேசியதற்காக தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், பாஜகவினர் நெல்லை கண்ணன் இல்லத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதால், அவர் மீது அதிமுகவினர் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

காவல் ஆணையர் அலுவலகம் முன்பு நெல்லை கண்ணன் படத்தை செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நெல்லை கண்ணன் வீட்டில் இருந்து வெளியே புறப்படத் தயாரான போது, அவர் வெளியே செல்ல போலீஸார் மறுப்பு தெரிவித்தனர். அவர்களிடம் உடல்நிலை சரியில்லை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என நெல்லை கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் மற்றும் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

Story image

இதனிடையே, நெல்லை கண்ணன் வீட்டின் முன்பாக திமுக, காங்கிரஸ், முஸ்லிம் அமைப்பினர் மற்றும் பாஜக, இந்து முன்னனி அமைப்பினரும் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. அவரை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நெல்லை கண்ணனை இன்று மாலைக்குள் போலீஸார் கைது செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

நெல்லை வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நெல்லை கண்ணனை வெளியேற்ற வலியுறுத்தி பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Story image

இதைத் தொடர்ந்து, நெல்லை கண்ணன் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படலாம் என்று குடும்ப வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.